Latestமலேசியா

கோலாலம்பூரில் மோசடி விவகாரத்தை தீர்க்க 60,000 ரிங்கிட் லஞ்சம் கேட்ட அமலாக்க அதிகாரி கைது

கோலாலம்பூர், ஜூன் 30 – மோசடி விவகாரத்தை தீர்க்க 60,000 ரிங்கிட் கையூட்டு கேட்டது தொடர்பில் அமலாக்க அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். 40 வயதுடைய அந்த ஆடவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோலாலம்புர் கிளை அலுவலகத்தில் இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டார் என
MACC -க்கு நெருக்கமான தகவலின்படி கூறின. அந்த சந்தேகப் பேர்வழி கோலாலம்பூர் மாநகரிலுள்ள உணவகத்தில் ஒருவரை சந்தித்ததோடு லஞ்சப் பணத்தை ஒப்படைப்பதற்கு அருகேயுள்ள இடத்தில் காத்திருக்கும்படி தெரிவித்துள்ளதாக நம்பப்படுகிறது.

எனினும் அந்த சந்தேகப் பேர்வழி கூறியபடி அந்த இடத்திற்கு வரவில்லை. அதன் பின் அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதோடு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின் 10,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டதை கோலாலம்பூர் MACC இயக்குநர் பவ்சி உசேய்ன் ( Fauzi Husin ) உறுதிப்படுதினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!