Latestமலேசியா

ஜாரா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘The Thalapathy Salute’ ஃபுட்சால் போட்டி; பூச்சோங்கில் இளைஞர்கள் உற்சாக பங்கேற்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர், பூச்சோங் Esi Hub மையத்தில் ‘The Thalapathy Salute’ எனும் இளைஞர்களை மையமாகக் கொண்ட விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வு முதன் முறையாக நடைபெற்றது.

நாடு முழுவதும் புதிய பள்ளி தவணை தொடங்குவதன் அடையாளமாகவும், பகடிவதைப் போன்ற பிரச்னைகளை விட்டொழித்து ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர்.

பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 92 மாணவர்கள் ஃபுட்சால் (Futsal) போட்டிகள் மற்றும் தொடர்புடைய மற்ற நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

25 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘பிகில்’ பெரியோர் பிரிவுப் போட்டிகளில், பூச்சோங் ரோவர்ஸ் கிளப் (Rovers Club) வெற்றி வாகை சூடியது.

சுயேட்சை அணியான அரகானா (Arakana) இரண்டாம் இடத்தையும், சன்வேய் டேசா மெந்தாரியைச் (Sunway, Desa Mentari) சேர்ந்த ஃப்ளை (Fly) அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

7 முதல் 15 வயது வரையிலான சிறார்கள் பிரிவில், ஜூனியர் பிகில்ஸ் (Junior Bigils) அணி வெற்றியாளராகவும் தளபதி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

JARA (D) Sdn Bhd, Mydeen Global Sdn Bhd, Rehoboth Global Ventures, Messrs Aravind, Atifah & Rajvin Assc, Messrs Keziah Chambers, Messrs Pravind Kumar & Assc ஆகியவை நிகழ்ச்சி நிதி ஆதரவாளர்களாக இருந்தன.

இதே நிகழ்வில், ‘தளபதி’ விஜய் படத் தலைப்புகளில் சுமார் 8 ற்பனை மற்றும் உணவுக் கூடாரங்களும் திறக்கப்பட்டிருந்தன.

வருமானம் இல்லாத தனித்து வாழும் தாய்மார்கள், ஓய்வுப் பெற்ற முதியவர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், வேலையில்லா இளைஞர்கள் ஆகியோருக்கு இந்த விற்பனை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

CSR சமூக நோக்கில் ஆதரவற்ற சிறார்களுக்கான பள்ளித் தேவைகள் போன்றவற்றுக்கு உதவும் நோக்கத்தை இது கொண்டிருந்தது.

மக்கள் திரளாக கலந்துகொண்டது இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!