Latestமலேசியா

சிலாங்கூர் மாநில அரசு, சிலாங்கூர் எப்சி அணிக்கு ஒற்றுமை நிதி தொடங்கியுள்ளது

ஷா ஆலம், ஜூன் 27 – MFL எனப்படும் மலேசிய காற்பந்து லீக் அமைப்பு அபராதம் விதித்ததை தொடர்ந்து சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் மூலம் சிலாங்கூர் காற்பந்து கிளப்பிற்காக மாநில அரசு, ஒற்றுமை நிதியை தொடங்கியுள்ளது. நேற்று இரவு தொடங்கப்பட்ட இந்த நிதிக்கு ஜூலை 2ஆம் தேதிவரை நிதி திரட்டப்படும். இந்த பருவத்திற்கான Charity Shield ஆட்டத்தில் கலந்துகொள்வதிலருந்து விலகிக் கொண்டதால் சிலாங்கூர் காற்பந்து கிளப்பிற்கு 100,000 ரிங்கிட்டை MFL அபராதம் விதித்தது நியாயமற்ற மற்றும் அடக்குமுறை முடிவாக இருப்பதால் ஒற்றுமை நிதி தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் இளைஞர் மற்றும் விளையாட்டு குழுவிற்கான தலவரான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி ( Mohd Najwan Halimi ) தெரிவித்திருக்கிறார்.

மாநில அரசு சிலாங்கூர் சுல்தானின் ஆணையை மதிப்பதோடு , சிலாங்கூர் காற்பந்து கிளப் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் அநீதிகள் மீதான அவரது மாட்சிமையின் உறுதியையும் உணர்திறனையும் பிரதிபலிக்கிறது. எனவே இந்த முயற்சியானது, நாடு முழுவதும் உள்ள அனைத்து மலேசியர்களும் ,கால்பந்து ரசிகர்களும் மாநில எல்லைகளைப் பொருட்படுத்தாமல், சிலாங்கூர் காற்பந்து கிளப்பிற்கு ஆதரவைத் தெரிவிக்க சிலாங்கூர் F.C யின் ஒற்றுமை நிதிக்கு 1 ரிங்கிட் சிறிய பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என நேற்று வெளியிட்ட அறிககையில் முகமட் நஜ்வான் ஹிலிமி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!