
புத்ராஜெயா, மே-4-தேசியப் பதிவிலாகாவான JPN மற்றும் மலேசிய குடிநுழைவுத் துறையான JIM ஆகியவை வரும் ஜூன் மாதம் முதல் புதிய வடிவமைப்பிலான MyKad மற்றும் கடப்பிதழை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளன.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அதனைத் தெரிவித்துள்ளார்.
இவை ஜூன் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படும்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, போலி ஆவணங்களைத் தவிர்க்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதிநவீன மற்றும் விவேக அம்சங்களுடன் இந்த புதிய ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கான கட்டமைப்பு வசதிகள், கணினி அமைப்புகள் மற்றும் இதர ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாக சைஃபுடின் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியமாகும்.
அந்த வகையில், இந்த புதிய MyKad மற்றும் கடப்பிதழ் வெளியீடு ஒரு வரலாற்று மைல்கல்லாக அமையும் என சைஃபுடின் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், குடியுரிமை விண்ணப்பங்களை நிர்வகிக்கும் புதிய முறையும் இறுதி நிலையில் இருப்பதாகவும், அது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சின் இன்றைய மாதாந்திர கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.



