Latestமலேசியா

ஜூலை வரை சமூக ஊடகங்களிலிருந்து சுமார் 1 லட்சம் மோசடிப் பதிவுகள் நீக்கம்: கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

ஸ்கூடாய், ஆகஸ்ட்-22-சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட சுமார் ஒரு லட்சம் மோசடி மற்றும் ‘scam’ பதிவுகள், இவ்வாண்டு ஜூலை 15-ஆம் தேதி வரை வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளன.

​நீக்கப்பட்ட 99,693 பதிவுகளின் இந்த எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டு முழுவதும் நீக்கப்பட்ட 98,503 பதிவுகளை விட அதிகமாகும்.

​Meta, TikTok மற்றும் YouTube போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC சார்பில் 106,268 கோரிக்கைகள் அனுப்பப்பட்டதாக தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

​பதிவுகளை நீக்கும் இறுதி அதிகாரம் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்களிடமே இருந்தாலும், மோசடி தொடர்பான சம்பவங்களில் நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு அவை கட்டுப்படும் விகிதம் 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஜோகூர், ஸ்கூடாயில் நடைபெற்ற ‘மடானி கித்தா’ (Program Madani Kita) நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது மக்கள் இணைய வழி மோசடிகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!