
பாசீர் மாஸ், ஜூன்-10-பாசீர் மாஸ் வனப்பகுதியில் மெராந்தி, கம்போங் டோக் ரூசாவில் ஐந்து மியான்மர் பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 முதல் 41 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும், பொது நடவடிக்கைப் படையின் 8வது பட்டாலியனால், நேற்று பிற்பகல் மணி 2.30 க்கு கைது செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை நடத்தப்பட்டபோது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக பொது நடவடிக்கை படையின் தென் கிழக்கு வட்டார பிரிவின் மூத்த உதவி கமிஷனர் அகமட் ரட்ஷி உசேய்ன் (Ahmad Radzi Hussain ) தெரிவித்தார்.
எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறிய அந்த சந்தேக நபர்கள் சுங்கை கோலோக் வழியாக மலேசியாவிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
அதிகாரிகளிடம் பிடிபடாமல் இருப்பதற்காக, நியமிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, அந்த வனப்பகுதியை அவர்கள் ஒரு இடைவழி இடமாகப் பயன்படுத்தியதாக அகமட் ரட்ஷி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
அவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக பாசிர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவு சட்டத்தின் பிரிவு 6(1)(c)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.



