Latestமலேசியா

பெரிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் ; பாக் குத் தே, சிற்றுண்டிச்சாலை போன்ற அர்ப விஷயங்களுக்காக சண்டை வேண்டாம்

கோலாலம்பூர், மார்ச் 18 – பொருளாதார சூழலை மேம்படுத்துவது அல்லது முதலீடுகளை கவருவது போன்ற பெரிய பயனுள்ள விவகாரங்களில் மலேசியர்கள் செலுத்த வேண்டுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டியுள்ளார்.

ஜெர்மனிக்கு, வெற்றிகரமான அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய தாம், சிறு சிறு சண்டைகள் தான் நாட்டின் தலுச் செய்தியாக இடம் பெற்றிருப்பதை கண்டு தாம் ஏமாற்றம் அடைந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கான முதலீடுகள் குறித்து தாம் விவாதித்த வேளை ; நாட்டில், பாக் கூத் தே மற்றும் பள்ளி சிற்றுண்டிச்சாலை தொடர்பான சர்ச்சைகளை ஓய்ந்த பாடில்லை என பிரதமர் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

ஆரோக்கியமான மற்றும் விவேகமான விவாதங்களில் கவனம் செலுத்துமாறு தலைவர்களையும், மக்களையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஜெர்மனிக்கான தனது பயணம் இலக்கை அடைந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், முதலீட்டாளர்கள் பலர் மலேசியாவில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதற்கு பொதுச் சேவை குழுவின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளே காரணம் எனவும் அவர் பாராட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!