Latestஉலகம்

பொருட்களை வாங்க மறுத்ததால் கடையில் சிறைபிடிக்கப்பட்ட சுற்றுப்பயணிகள் : சீனாவில் பரபரப்பு

யுனான், ஏப்ரல் 16 – சீனாவில், படுக்கை பொருட்களை வாங்க மறுத்ததால், உள்ளூர் சுற்றுப் பயணிகள் சிலர், கடை ஒன்றில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுனான் மாநிலத்திலுள்ள, Xishuangbanna Dai எனுமிடத்தில், கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி, அந்த வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதனால், சம்பந்தப்பட்ட கடைக்கு சென்ற 37 உள்ளூர் சுற்றுப் பயணிகள் சிக்கித் தவித்தனர்.

அவர்களில் சிலர், சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ள காணொளிகள் வைரலாகி, கடும் கண்டனங்களையும், விமர்ச்சனங்க்களையும் பெற்று வருகின்றன.

சுற்றுப் பயணிகள் வளாகத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, பணியாளர்கள் சிலர் கடையின் நுழைவாயிலில் காவலுக்கு நிற்கும் வேளை : அடைப்பட்டிருக்கும் சுற்றுப் பயணிகள் சிலர், அங்கிருக்கும் படுக்கையில் படுத்திருப்பது அல்லது உட்கார்ந்திருப்பதையும் காண முடிகிறது.

எனினும், அவர்கள் எத்தனை மணிக்கு விடுவிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை.

அந்த வைரல் காணொளிகள் தொடர்பில், விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ள வேளை ; Taisi Dika Sleep எனும் சம்பந்தப்பட்ட கடையின் வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதோடு, சம்பந்தப்பட்ட சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த Faxian Zhilv எனும் சுற்றுலா நிறுவனத்திற்கும், பத்தாயிரம் யுவான் அல்லது ஆறாயிரம் ரிங்கிட்டுக்கும் கூடுதலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யுனானிற்கு வரும் சுற்றுப்பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகளால், பொருட்களை வாங்க அல்லது ஷாப்பிங் செய்ய கட்டாயப்படுத்தப்படுவது வழக்கமானது தான் எனவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!