Latestமலேசியா

போலீ கடப்பிதழ் தொடர்பில் இரு வெளிநாட்டினர் கைது

ஜோகூர் பாரு, மார்ச் 28 – சில ஆண்டுகளாக, நாட்டில் அதிக காலம் தங்கியிருக்கும் நபர்களுக்கு உதவுவதற்காக, கடப்பிதழ் முத்திரைகளை தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட இரண்டு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அந்த இருவரும் தங்களது சேவைக்காக வாடிக்கையாளர்களிடம் 650 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட்வரை பெற்று வந்துள்ளனர். ஜொகூர் பாருவிலுள்ள Bangunan Sultan Iskandar சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தும் வளாகத்திற்கு அருகே ஒரு காரில் இருந்த 30 வயதுடைய பாகிஸ்தான் ஆடவரும் 35 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த ஆடவரும் ஜோகூர் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததைத் தொடர்ந்து அவர்களது நடவடிக்கை அம்பலத்திற்கு வந்தது.

அந்த இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் Baharuddin Tahir தெரிவித்தார். அவர்களிடமிருந்து ஐந்து இந்திய கடப்பிதழ்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு கடப்பிதழ்கள் 3,455 ரிங்கிட் ரொக்கம் மற்றும் 474 ரிங்கிட் மதிப்புடைய வெளிநாட்டு நாணயங்கள், நான்கு விவேக கைதொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இருவரும் 2022 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் கூடுதல் நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு அவர்களது வேலை பெர்மிட் புதுப்பிக்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரியவந்ததாக Baharuddin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!