பேங்கோக், ஜூலை-16, தாய்லாந்தில் குளிக்கவில்லை என்ற அற்ப காரணத்திற்காக மனைவியைக் கட்டையால் அடித்தே கொலைச் செய்துள்ளார் கணவர்.
அத்தம்பதி அடிக்கடி ஒன்றாக குடித்து விட்டு சண்டைப் போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கின்றனர்.
சம்பவத்தின் போதும் சண்டை நடந்திருக்கிறது; சண்டை முடிந்து மனைவியைப் போய்க் குளிக்கச் சொன்ன போது, அவர் மறுத்ததால், ஆத்திரத்தில் கணவர் கட்டையால் அடித்துள்ளார்.
எனினும் மனைவி இறந்து விட்டார் என்பதை அறியாமல், அவரை குளிப்பாட்டுவதற்காக குளியலறைக்குக் இழுத்துச் சென்றார்.
மனைவி பேச்சு மூச்சின்றி கிடந்ததைக் கண்டு பயந்த பிறகே அண்டை வீட்டாரிடம் அவர் உதவிக் கேட்டுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் வீட்டின் குளியலறையில் கிடந்த 44 வயது மனைவியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.
கூர்மையற்ற ஆயுதத்தால் தலையில் பலங்கொண்டு தாக்கப்பட்டதால் அவர் மரணமடைந்தது தடயவியல் சோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.
குளியலறையில் ஒளிந்துக் கொண்டிருந்த 53 வயது கணவரைக் கைதுச் செய்த போலீஸ், அவரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்காக மேலும் ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது.