Latestமலேசியா

மரணம் அடைந்த தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்த 116,000 ரிங்கிட் மாயம் மகன் அதிர்ச்சி

சிபு, ஏப் 8 – மரணம் அடைந்த தனது தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்த 116,000 ரிங்கிட் திடீரென மாயமாய் இருந்தது குறித்து 65 வயதுடைய Lau Kah Lee பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். 2008ஆம் ஆண்டு தமது தாயார் இறந்தபோது அவரது வங்கிக் கணக்கில் அந்த சேமிப்பு தொகை இருந்ததாக சிபுவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஓய்வு பெற்றவரான Lau Kah Lee கூறினார். திரும்பக் கோரப்படாத வங்கிக் கணக்கிலிருந்து அப்பணத்தை மீட்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம்தேதி அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அரசாங்க தலைமை கணக்காய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்தாகவும் அப்பணம் வங்கிக் கணக்கில் இல்லையென தெரியவந்ததைத் தொடர்ந்து தாம் மேலும் மனஉளைச்சலுக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளானதாக Lau Kah keh கூறினார்.

ஒரு கும்பலைச் சேர்ந்த யாரோ ஒருவர் அப்பணத்தை சட்டவிரோதமாக மீட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார். மேலும் மாவட்ட அலுவலகம், தலைமை கணக்காய்வாளர் அலுவலகம் , மற்றும் தேசிய பதிவுத் துறை ஆகியவற்றில் ஆவணங்களைப் பெற்று அந்த கும்பல் அந்த பணத்தை மீட்டிருக்கலாம் என அவர் கூறினார். சிபுவில் இதே போன்ற மூன்று சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் இதன் தொடர்பில் நிதியமைச்சு விசாரணை நடத்தி வருவதையும் Lau Kah Keh சுட்டிக்காட்டினார். இது போன்ற மோசடி சம்பவங்கள் பல நடத்திருக்கலாம் என்றும் திரும்ப பெறாமல் இருக்கும் கணக்கில் இருக்கும் பணம் குறித்து விழிப்பாக இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!