Latestமலேசியா

மாசாயில் உணவக உரிமையாளர் அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கையை தடுத்ததால் ஏற்பட்ட கலவரம் வைரலானது

பாசீர் கூடாங், மார்ச் 24 – ஜோகூரில் Masai, Taman Rinting வட்டாரத்திலுள்ள உணவகத்தில் Pasir Gudang மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கையை தடுக்க முயன்ற உணவக உரிமையானரின் நடவடிக்கையினால் ஏற்பட்ட கலவரம் சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாழக்கிழமை இரவு மணி 10.25 அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Seri Alam மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden Mohd Sohaimi தெரிவித்தார்.

அப்பகுதியில் போக்குவரத்தை கண்காணித்துவந்த Seri Alam போக்குவரத்து போலீஸ் ஒத்துழைப்போடு Pasir Gudan மாநகர் மன்றம் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட OPS Bersepadu கூட்டு நடவடிக்கையை தனிப்பட்ட நபர் ஒருவர் தடுக்க முயன்றபோது அங்கு கலவரம் ஏற்பட்டதாக Mohd Sohaimi கூறினார். சட்டத்திற்கு எதிரான வர்த்தக நடவடிக்கையினால் அந்த உணவகத்தின் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டபோது அங்கு கலவரம் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!