Latestமலேசியா

மித்ரா சிறப்பு பணிக்குழு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது – டத்தோ ரமணன்

கோலாலம்பூர், டிச 24 – மித்ராவை யார் எடுத்துக்கொண்டாலும் அவர்கள் முன்னோக்கி செல்வதற்கும் அந்த நிறுவனத்தை கையாள்வதற்கான வலுவான கட்டமைப்பை தமது தலைமையிலான மித்ரா சிறப்புக் குழு 2023 ஏற்படுத்தியுள்ளது என அதன் தலைவரான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இந்த நாட்டில் B40 தரப்பைச் சேர்ந்த இந்திய சமூகத்தின் மேம்பாடு மற்றும் முன்னேற்றம் மிக முக்கியமானது . சரியான கல்வி, கூடுதல் வருமானத்தைக் கொண்ட வேலை வாய்ப்புக்களின் மூலம் அவர்களை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை மித்ரா தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மித்ரா பணிக்குழு 2023-இல் அதன் 100 விழுக்காடு இலக்கை அடைந்துள்ளதுதோடு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து முக்கிய நோக்கங்களையும் பூர்த்தி செய்துள்ளதையும் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணையமைச்சருமான ரமணன் தெரிவித்தார்.

மித்ரா தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக அதன் நிதிகள் முழுமையாக ஒரு வெளிப்படையான, பொறுப்புணர்வான மற்றும் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் மித்ரா தனது தோற்றத்தை வெற்றிகரமாக மாற்றியதோடு கடந்த கால குற்றச்சாட்டு முழுமையாக விடுபட்டு முறைகேடு நடைபெறுவதற்காக வாய்ப்புகள் குறைந்துள்ளது என்று 2023ஆம் ஆண்டில் (MACC) மித்ராவுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதியை MACC அறிவித்தது. MACCயின் ஒருமைப்பாடு மேலாண்மை பிரிவு இயக்குனர் டத்தோ Nor Azmi Karim நவம்பர் 22ஆம் தேதி கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ கடிதம் மித்ராவிடம் வழங்கப்பட்டது. எல்லா வேளையிலும் மித்ராவுக்கு MACC வழங்கிய அணுக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கு தம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளதாகவும் ரமணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான நிலை நிச்சயமாக மித்ராவுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த சிறப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, மித்ராவை மேலும் சீரமைத்து அதனை வெற்றிகரமாக செயல்படவைப்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டது. சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதில் நான் உறுதியாக இருந்தேன். குறிப்பாக மித்ராவின் விநியோகிப்பு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை அம்சங்களிலும் நான் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தேன் .

அனைத்து நிதிகளும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்றடையவேண்டுமே தவிர மூன்றாம் தரப்பினரால் அல்ல என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார். அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்த முறை பின்பற்றப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மித்ரா நிதி எவ்வாறு கையாளப்படும் என்பதை தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். மித்ராவுக்கு தலைமை தாங்குபவர்கள் தங்கள் பொறுப்புகளை புரிந்துகொள்வார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்த வேளையில் என் மீதும் மித்ரா பணிக்குழுவின் இதர உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை வைத்த பிரதமருக்கும் தாம் நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாக ரமணன் தெரிவித்தார்.

மித்ரா சிறப்புக் குழுவின் அனைத்து உறுப்பினர்கள் , மித்ரா தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர், மித்ரா ஊழியர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் ஆதரவு வழங்கிய இந்திய சமூகத்திற்கு நன்றியை தெரிவித்தும் கொள்வதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!