Latestமலேசியா

முதலாம் ஆண்டு மாணவர்கள் இவ்வாரம் BAP உதவித் தொகையை பெறுவார்கள்

ஜாசின், மார்ச் 11 – நாடு முழுவதும், முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும், நான்கு லட்சத்து 47 ஆயிரத்து 982 மாணவர்கள், இவ்வாரம் BAP எனப்படும் பள்ளி ஆரம்ப உதவித் தொகையை பெறுவார்கள்.

அதற்காக, எட்டாயிரத்து 903 பள்ளிகளுக்கு, மொத்தம் ஆறு கோடியே 71 லட்சத்து 97 ஆயிரத்து 300 ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, கல்வி தலைமை இயக்குனர் அஜ்மான் அட்னான் தெரிவித்தார்.

இவ்வாண்டு முதலாம் ஆண்டில் தங்கள் கல்விப் பயணத்தை தொடங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும், அந்த உதவித் தொகை தானியங்கி முறையில் வழங்கப்படும்.

அதற்காக, பெற்றோர்கள் பிரத்தியேக விண்ணப்பம் எதுவும் செய்யத் தேவையில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!