Latestமலேசியா

மூன்று மாணவர்கள் ஓரினப் புணர்ச்சி பெர்கர் விற்பனையாளர் குற்றத்தை மறுத்தார்

மூவார் , ஏப் 8 – மூவர் மாவட்டத்திலுள்ள இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்களை ஓரிண புணர்சி செய்ததாக பெர்கர் விற்பனையாளரும் பகுதிநேர காற்பந்து பயிற்சியாளருமான ஆடவன் ஒருவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது . கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி காலை 7 மணிக்கும் 10 மணிக்குமிடையே 14 மற்றும் 15வயதுடைய அந்த மூன்று மாணவர்களுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் புரிந்தாக 27 வயதுடைய Muhammad Fikri Mohd Yusof மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் Nurfarah Syahhidah Syahidah Mohd Noh முன்னிலையில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்களை அந்த ஆடவன் மறுத்தான். இடைநிலைப்பள்ளியின் காற்பந்து குழுவின் மாணவர்களின் சீருடைக்கான அளவு எடுக்க வேண்டும் என கூறி அந்த மூன்று மாணவர்களையும் Jalan Temenggong Ahmad ட்டிலுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து அவர்களை ஒரிண புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக அந்த நபருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தங்கள பள்ளியின் ஆசிரியரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த ஆடவனுக்கு எதிராக அந்த மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!