Latestமலேசியா

மேற்காசியாவில் எதிர்ப்பு போக்கை கொண்டுள்ள தரப்பினர் அமைதிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் -மலேசியா வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப் 27 – மேற்காசியாவில் எதிர்ப்பு போக்கை கொண்டுள்ள தரப்பினர் அங்கு நிலைமை மோசமாகுவதை தடுப்பதற்காக அமைதிக்கு முன்னுரிமை வழங்கும்படி மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது. மேற்காசியாவில் நெருக்கடி அதிகரித்து வருவது குறித்து மலேசியா கவலை அடைவதாக நியூயார்க்கிலுள்ள ஐ.நாவுக்கான மலேசியாவின் நிரந்தர பேராளர்
டத்தோ Dr. Ahmad Faisal Muhamad தெரிவித்திருக்கிறார். எதிர்ப்புபோக்கையும் விரோத மனப்பான்மையும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேற்காசியா மீதான பொது விவாதத்தில் டாக்டர் Ahmad Faisal இதனைத் தெரிவித்தார்.

இஸ்ரேல் தொடர்ந்து சுமார் 200 நாட்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்திவரும் தாக்குதலினால் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அளவில் மனித பேரிடர் ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். உதாரணத்திற்கு Nasser மற்றும் Al Shifa மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் குறித்தும் அந்த மருத்துவமனைகளுக்கு அருகே பெரிய அளவில் மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட புதைகுழிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது குறித்தும் மலேசியா அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் Ahmad Faisal கூறினார். அனைத்துலக சமூகம் இது குறித்து விரிவான மற்றும் வெளிப்படைத்தன்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மலேசியா கேட்டுக்கொள்வதாக அவர் அறைகூவல் விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!