Latestஉலகம்விளையாட்டு

ரியல் மெட்ரிட் கிளப்பின் பயிற்சிக்குழு தலைவராக ஜோஸ் மோரின்ஹோ மீண்டும் நியமனம்

மெட்ரிட் , ஜூன்-12-ஸ்பெய்னின் பிரபலமான ரியல் மெட்ரிட் ( Real Madrid)
காற்பந்து கிளப்பிற்கு அடுத்த மூன்று ஆண்டு கால உடன்பாட்டின்கீழ் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜோஸ் மோரின்ஹோ ( Jose Mourinho ) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், 13 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த Jose Mourinho மீண்டும் தங்களது கிளப்பிற்கு திரும்பியுள்ளதாக ரியல் மெட்ரிட் கிளப் அறிவித்துள்ளது.

ரியல் மெட்ரிட் இரண்டு சீசன்களாக எந்தவொரு பெரிய கிண்ணத்தையும் வாகைசூடாததால் பார்சிலோனாவால் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்தச் சூழலில், அல்வாரோ அர்பெலோவாவிற்குப் (Alvaro Arbeloa) பதிலாக 63 வயதான Jose Mourinho ரியல் மெட்ரிட்டின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

2029ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம்தேதிவரை அடுத்த மூன்று பருவ காலத்திற்கு அவர் இந்த பொறுப்பில் இருந்து வருவார்.

ஜூலை 13 ஆம் தேதியன்று Jose Mourinho ரியல் மெட்ரிட் கிளப்பில் இணைவார்.

லீக் தொடரில் தோல்வியின்றி, ஆனால் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பென்பிகா அணியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

இதற்காக 15 மில்லியன் யூரோ தொகையை ரியல் மெட்ரிட் செலுத்தியதாக பென்பிகா தெரிவித்தது.

2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை இதற்கு முன் ரியல் மெட்ரிட் குழுவில்
Jose Mourinho பயிற்சியாளராக பணியாற்றிய காலத்தில் La Liga, Copa del Rey மற்றும் சூப்பர் ஸ்பெய்ன் கிண்ணத்தை ரியல் மெட்ரிட் வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!