Latestமலேசியா

12வது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பலி, சிறுவன் காயம்; தம்போயில் தாய் கைது

ஜோகூர் பாரு, ஜூன்-9-ஜோகூர் பாரு, தம்போயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து இரண்டு சிறுவர்கள் கீழே விழுந்த துயரச் சம்பவத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

அவரின் 10 வயது அண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடமான ஏழாவது மாடியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த வேளையில், ஆபத்தான நிலையிலுள்ள சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

​இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவர்களின் தாயாரான 37 வயது வெளிநாட்டுப் பெண்மணியை ஜோகூர் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

தொடக்கக் கட்ட விசாரணையில், அவருக்குக் குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பதும், போதைப்பொருள் பயன்பாடு இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

​2001 சிறார் சட்டத்தின் கீழ், குழந்தைகளைப் பாதுகாப்பதில் அலட்சியமாக இருந்தது மற்றும் ஆபத்தில் கைவிட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை வரை 4 நாட்களுக்கு அவரைத் தடுத்து வைக்க போலீஸ் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!