Latestமலேசியா

16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியை மீது 3 குற்றச்சாட்டுகள் பதிவு

ஈப்போ, செப்டம்பர்-28,16 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறி, ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் Ustazah எனப்படும் இஸ்லாமியக் கல்வி ஆசிரியை மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

​48 வயதான ஹஸ்லினா அபு பாக்கார் (Haslina Abu Bakar) என்ற அம்மாது, கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிந்தா மாவட்டத்திலுள்ள ஓர் இடைநிலைப் பள்ளியின் இஸ்லாமியக் கல்விக் கூடத்தில் வைத்து, மாணவனின் உதட்டில் முத்தமிட்டது, கட்டியணைத்தது உட்பட உடலியல் ரீதியான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணைக் கோரினார்.

​சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

​நீதிமன்றம் அவரை 10,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க அனுமதித்த வேளை, வழக்கின் மறுசெவிமெடுப்புக்காக அக்டோபர் 28-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!