Latestமலேசியா

30 நிமிடங்களாக நகராமல் நின்ற டேங்கர் லாரி; ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு

கூலிம், ஆகஸ்ட் 20 – கூலிம் ஹை-டெக், ஜாலான் ஹை-டெக் 12-ல் (Jalan Hi-Tech 12, Kulim Hi-Tech) போக்குவரத்து விளக்கில் சுமார் 30 நிமிடங்கள் நின்றிருந்த டேங்கர் லாரியின் ஓட்டுநர் ஒருவர் நேற்று லாரிக்குள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மாலை 6.46 மணியளவில், 24 வயது நபர் ஒருவர் லாரி நீண்ட நேரமாக நிற்பதைக் கண்டு சந்தேகமடைந்து பார்த்தபோது, ஓட்டுநர் அசைவின்றி இருந்துள்ளார்.

அவர் தூங்குவதாக நினைத்து எழுப்ப முயன்றும் பதில் இல்லாததால் அவசர உதவியை அவர் நாடியுள்ளார்.

பின்பு சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரி, ஓட்டுநர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!