Latestமலேசியா

4 நிதிகளுக்கு RM99 மில்லியனுக்கும் அதிகமான இலாபப் பகிர்வை அறிவித்த Public Mutual

கோலாலம்பூர், மே-3-Public Bank வங்கியின் துணை நிறுவனமான Public Mutual, ஏப்ரல் 30-ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டுக்கான அதன் 4 நிதிகளுக்கு 99 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இலாபப் பகிர்வை அறிவித்துள்ளது.

அவ்வகையில் ​Public Islamic Asia Dividend நிதிக்கு ஒரு யூனிட்டுக்கு 1.00 சென் விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், Public Ehsan மற்றும் Public Select ஆகிய கலவை சொத்து கன்சர்வேட்டிஃவ் நிதிகள் தலா 0.75 சென் இலாபப் பகிர்வை வழங்குகின்றன.

இதனிடையே, அரையாண்டு இலாபப் பகிர்வு அடிப்படையிலான Public Islamic Dividend நிதி ஒரு யூனிட்டுக்கு 0.50 சென் விநியோகத்தை வழங்குகிறது.

மலேசியாவின் மிகப்பெரிய தனியார் அறங்காப்பு நிறுவனமான இது, 180-க்கும் மேற்பட்ட நிதிகளை நிர்வகித்து வருகிறது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓய்வூதியத் திட்ட வழங்குநராக 9 PRS நிதிகளையும், நாடு முழுவதும் 31 கிளைகளையும் கொண்டு Public Mutual நிறுவனம் செயல்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!