Latestமலேசியா

7 ஆண்டுகளுக்குப் பின் திருப்பம்: ஜோகூர் பாருவில் காணாமல் போன பெண் லங்காவியில் கண்டுபிடிப்பு

லங்காவி, ஜூன்-19-2019-ஆம் ஆண்டு ஜோகூர் பாருவில் உள்ள தனது குடும்ப வீட்டை விட்டு வெளியேறி, காணாமல் போனதாகப் பதிவுச் செய்யப்பட்ட 21 வயது இளம் பெண், லங்காவியில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

​பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் குவாவில் உள்ள Taman Helang Perdana வீடமைப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

​அப்போது, அந்தப் பெண் ஒரு குழந்தையுடன் அங்கு வசித்து வந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர்.

​தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூர், Majidee போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் இன்னும் காணாமல் போனவர்கள் பட்டியலிலேயே இருப்பது தெரியவந்தது.

​தான் ஜோகூர் பாரு வீட்டை விட்டு வெளியேறி லங்காவியில் குடியேறியதாகவும், ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.

சோதனையின் போது அவரது கணவர் வீட்டில் இல்லை.

​அப்பெண் பாதுகாப்பாக இருக்கும் தகவல் ஜோகூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லங்காவி போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!