புதுடில்லி, ஏப் 16 – அயோத்தியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், ஒன்று அல்லது 2 நிமிட எரிபொருள் மீதம் இருந்த நிலையில், சண்டிகரில் தரையிறங்கியதாக Delhi போலீஸ் குற்றப்பிரிவின் துணை கமிஷனர் சதீஷ் குமார் கூறியதை அந்த விமான நிறுவனம் மறுத்துள்ளது. மாற்று விமான நிலையத்திற்குத் திருப்பிவிட, எல்லா நேரங்களிலும் போதுமான எரிபொருளை விமானம் கொண்டிருந்தது. ஏப்ரல் 13 ஆம் தேதியன்று அயோத்திக்கும் டெல்லிக்கும் இடையே சேவையில் ஈடுபட்ட
IndiGo விமானம் 6E 2702 டெல்லியில் மோசமான வானிலை காரணமாக
சண்டிகாருக்கு (Chandivgarh ) திருப்பி விடப்பட்டது.
அந்த விமானத்தின் விமானி வழக்கமான நடைமுறைக்கு ஏற்பவே சண்டிகாரில் அந்த விமானத்தை தரையிறக்கியதாகவும் இது முற்றிலும் பாதுகாப்பு அடிப்படையில் அவர் அந்த நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார் என இண்டிகோ விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். விமானம் அனைத்து நேரங்களிலும் மாற்று விமான நிலையத்திற்குத் திருப்புவதற்கு போதுமான எரிபொருள் வைத்திருந்தது. எங்கள் பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. விமானத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என அந்த பேச்சாளர் கூறினார்.