
பாரீஸ், ஜூன்-11 – கூகள் நிறுவனம் தனது ஜெமினி AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தானியங்கி மின்னஞ்சல் சுருக்க அம்சத்தை, Gmail கைப்பேசி செயலி மூலம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இது திரையில் நீண்ட மின்னஞ்சல் _threads_களின் மேலே ஒரு சுருக்கப் பெட்டியாகவோ அல்லது பல பதில்களைக் கொண்டதாகவோ தோன்றும்.
ஜெமினியால் இயக்கப்படும் இந்த அமைப்பு முறை, சிக்கலான மின்னஞ்சல் _threads_களின் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, முக்கியத் தவல்களை தானாகவே பிரித்தெடுத்து, வாசகர் எதுவும் செய்யத் தேவையின்றி, சுருக்கமாக வழங்குகிறது.
இது பொதுவில் 2 அல்லது 3 முக்கியக் குறிப்புகளைக் கொண்டிருக்கும்; பின்னர் புதிய செய்திகள் சேர்க்கப்படும்போது தானாகவே புதுப்பிக்கப்படும்.
என்றாலும், பயனர்கள் இந்தப் பெட்டி பயனுள்ளதாக இல்லை என நினைத்தால் எந்த நேரத்திலும் அதை minimize செய்யலாம்; அதே சமயம், குறுகிய பரிமாற்றங்களுக்கு தானியங்கி சுருக்கம் இல்லை என்றால், “இந்த மின்னஞ்சலைச் சுருக்கவும்” என்ற தேர்வு manual முறையில் தொடர்ந்து கிடைக்கும்.
மிக நீண்ட அல்லது சிக்கலான மின்னஞ்சல்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லாமல் நேரத்தை மிச்சப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த தானியங்கி அம்சம் தற்போதைக்கு ஆங்கிலத்தில் உள்ள மின்னஞ்சல்களுக்கு மட்டுமே;
பிற உள்ளடக்கங்களுக்கு manual முறையில் சுருக்கங்கள் தொடர்ந்து கிடைக்கும் என கூகள் தெரிவித்துள்ளது.