Latestமலேசியா

சாம்ரி வினோத்துக்கு சிறப்புச் சலுகையா? கருத்துத் தெரிவிக்க சைஃபுடின் மறுப்பு

சாம்ரி வினோத்துக்கு சிறப்புச் சலுகையா? கருத்துத் தெரிவிக்க சைஃபுடின் மறுப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி-10,

சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சாம்ரி வினோத்துக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அது குறித்து நேரடியாகக் கருத்துரைப்பதைத் தவிர்த்துள்ளார்.

போலீஸாரின் தடையையும் மீறி SOGO பேரங்காடி வளாகத்தில் பேரணிக்காகக் கூடிய போது கைதான சாம்ரி வினோத்துக்கு, போலீஸ் நிலையத்தில் மேசையில் உணவுகள் பரிமாறப்பட்டு உபசரிப்பு பலமாக இருந்ததைக் காட்டும் புகைப்படங்கள் முன்னதாக வைரலாகியிருந்தன.

இது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் நேற்று மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

_”நான் பல தடவை கைதுச் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். ஆனால் ஒரு தடவை கூட எனக்கு மேசையில் வைத்து உணவுப் பரிமாறப்பட்டதில்லை”_ எனக் குறிப்பிட்ட அவர், சாம்ரி வினோத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை ஏன் என கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலோ, அவ்விவகாரத்தை 2 விதமான கண்ணோட்டங்களில் பார்க்கலாம் என்றார்.

_”சிலர், போலீஸார் கடுமையாக நடந்துகொள்ளாமல் மனிதாபிமானத்துடன் குடிக்க பானமும் உண்ண உணவும் தருகிறார்களே என்ற கோணத்தில் பார்ப்பர்; மற்றவரோ, தடுத்து வைக்கப்பட்டவருக்கு சலுகை காட்டப்பட்டதாக எடுத்துக் கொள்வர். ஆக பார்ப்பவரின் பார்வையால் தான் உள்ளது. எனவே தான் இதில் தான் ‘சிக்கிக்கொள்ள’ விரும்பவில்லை என”_ சைஃபுடின் பொதுவான ஒரு பதிலைக் கூறினார்.

இதனிடையே, சாம்ரி வினோத் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவாரா என, ஜெலுத்தோங் உறுப்பினர் RSN ராயர் கேட்டக் கேள்விக்கு, தற்போதைக்கு தம்மிடம் மேற்கொண்டு தகவல்கள் இல்லை என சைஃபுடின் சொன்னார்.

விசாரணை அறிக்கை முழுமைப் பெற்றதும் மக்களவையில் நிச்சயம் அது குறித்து தெரிவிப்பேன் என்றார் அவர்.

‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பேரணி நடத்துவதாகக் கூறிக் கொண்டு புறப்பட்ட சாம்ரியும் இதர 19 பேரும் சனிக்கிழமைக் கைதுச் செய்யப்பட்டனர்.

எனினும் அப்பேரணியை முன்கூட்டியோ தடைச் செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்ததால், அது பிசுபிசுத்துப் போனது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!