Latestமலேசியா

அடையாள அட்டையின் இறுதி 4 எண்களால் கிடைத்த அதிர்ஷ்டம்: சிலாங்கூர் தம்பதிக்கு RM23.53 மில்லியன் ‘அங்க்பாவ்’

அடையாள அட்டையின் இறுதி 4 எண்களால் கிடைத்த அதிர்ஷ்டம்: சிலாங்கூர் தம்பதிக்கு RM23.53 மில்லியன் ‘அங்க்பாவ்’

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 13 –

குடும்பத்தினரின் அடையாள அட்டையின் கடைசி நான்கு இலக்க எண்களை வைத்து பந்தயம் கட்டிய சிலாங்கூரைச் சேர்ந்த ஒரு தம்பதி, Toto 4D Jackpot-இல் 23.53 மில்லியன் ரிங்கிட் பரிசை வென்று செல்வந்தர்களாகியுள்ளனர்.

அத்தம்பதியினர் 6777 மற்றும் 5085 என்ற எண்களை தலா 2 ரிங்கிட்டில் சாதாரண பந்தயமாக பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு முறையும் Toto நிலையத்திற்கு செல்லும் போது 200 முதல் 300 ரிங்கிட் வரை செலவிடுவதாகவும் அவர்கள் கூறினர்.

“பல ஆண்டுகளாக இதே எண்களையே பயன்படுத்தி விளையாடி வந்தோம். ஒருநாள் இவை எங்கள் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு பெரிய வெற்றியைத் தரும் என்று நினைத்ததே இல்லை,” என்று அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினர்.

சீன புத்தாண்டை முன்னிட்டு கிடைத்த இந்த வெற்றியை அந்த தம்பதியினர் இது தங்களுக்கு கிடைத்த “பெரிய அங்க்பாவ்” என வர்ணித்துள்ளனர். இந்த பரிசுத் தொகையை தங்களின் தொழிலை விரிவுபடுத்தவும், புதிய வீடு வாங்கவும், எதிர்காலத்திற்கான சேமிப்பாக ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!