Latestமலேசியா

விமான நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி – ஐக்கிய அரபு சிற்றரசு

துபாய் , மார்ச் 3 -நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் அனைத்து சுற்றுப் பயணிகளுக்கும் உணவு மற்றும் தங்குமிடச் செலவை அரசாங்கமே ஏற்கும் என்று UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

UAE வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் பல நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டதால் பல சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அசல் திட்டங்களைத் தாண்டி துபாயில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், தற்போதைய சூழ்நிலை முழுவதும் பாதிக்கப்பட்ட மற்றும் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கான தங்குமிடம் மற்றும் சிகிச்சைக்கான செலவை அரசாங்கம் முழுமையாக ஈடுகட்டும் என்று ஐக்கிய அரபு சிற்றரசின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடி காலத்தில் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுவதை நாடு உறுதி செய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!