Latestமலேசியா

Public Mutual-லின் 2 நிதிகளுக்கு RM1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட இலாபப் பகிர்வு

கோலாலம்பூர், மார்ச்-4,

Public Mutual Bhd, 2026 பிப்ரவரி 28 ல் முடிவடைந்த நிதியாண்டுக்கான இரண்டு நிதிகளுக்கு, RM1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட இலாபப் பகிர்வை அறிவித்துள்ளது.

Public Regular Savings Sequel Fund நிதியின் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 0.46 சென்னும், PB ASEAN Dividend Sequel Fund நிதியின் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 0.10 சென்னும் இலாப ஈவுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Public Mutual, Public Bank Bhd ன் முழுமையான துணை நிறுவனம் ஆகும்.

180-க்கும் மேற்பட்ட நிதிகளை நிர்வகிப்பதன் மூலம் மலேசியாவின் மிகப்பெரிய தனியார் அறங்காப்பு நிதி நிறுவனமாக இது விளங்குகிறது.

தவிர, PRS எனப்படும் தனியார் ஓய்வூதியத் திட்டத்தை வழங்கும் 9 நிதிகளையும், நாடு முழுவதும் 31 கிளைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களையும் இது கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!