
தானா மேரா, மார்ச் 18 – ஜாலான் மாச்சாங் – தானா மேரா சாலையில் , பண்டார் பாரு தானாவில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
இன்று விடியற்காலை மணி 4.20 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த வேளையில் இதர நால்வர் உயிர்தப்பினர்.
புரோட்டோன் மைவி காரும் BMW 5 Series காரும் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களது கார்களிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர்.
விபத்து நிகழ்ந்த இடத்திலேயே ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் இறந்தனர். இரண்டு ஆடவர்கள், இரண்டு பெண்கள், இரு சிறுமிகள் மற்றும் சிறுவன் ஒருவனும் அந்த வாகனங்களில் பயணம் செய்தனர்.
உயிரழந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த நடவடிக்கை அதிகாரி ஹம்டான் அப்துல்லா தெரிவித்தார்.



