Latestஉலகம்

எரிபொருள் விலை உயர்வு பிலிப்பைன்ஸில் 400க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டன

மணிலா, மார்ச் 24 -எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் தங்களது நடவடிக்கைளை நிறுத்திவிட்டதாக பிலிப்பைன்ஸ் தேசிய போலீஸ் படையின் பேச்சாளர் ரன்டுல்ப் துவானோ ( Randulf Tuano) தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸில் மூடப்பட்ட எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 273 ஆக இருந்த நிலையில் தற்போது 403 ஆக உயர்ந்துள்ளன.

பிலிப்பைன்ஸ் முழுவதிலும் உள்ள 14,314 எண்ணெய் நிலையங்களில் தற்போது உள்ள எரிபொருள் ஏப்ரல் மாதம் மத்தியில்வரை கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

பல பகுதிகளில் சட்டவிரோத எரிபொருள் விற்பனை, விநியோகப் பதுக்கல் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளளன.

சில எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு விலை உயர்வு தொடர்பான விவகாரங்களும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

எரிபொருள் நிலையங்களின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, எரிசக்தித் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!