
வாஷிங்டன், மார்ச்-26-ஈரான் தனது நிர்வாகத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதை, அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் மறு உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால், அதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள தெஹ்ரான் அஞ்சுவதாக அவர் கூறிக் கொண்டார்.
“ஈரான் ஒரு ஒப்பந்தத்தை மிகவும் விரும்புகிறது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொன்னால் தன் மக்களாலேயோ அல்லது அமெரிக்காவாலேயோ கொல்லப்படுவோம் என அதன் தலைமை பயப்படுகிறது” என்றார் அவர்.
ஒரு மாதத்தை நெருங்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர வாஷிங்டனுடன் தெஹ்ரான் பேசி வருவதாக வெள்ளை மாளிகை கூறுவதை, ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும், “ஈரானின் உச்சத் தலைவராக இருக்க விரும்பும் ஒருவரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இல்லை. ஒருவேளை அந்தப் பதவியை எனக்கே தர விரும்பினாலும், நானும் அதை மறுப்பேன்” என, ஈரானியத் தலைமை வலுவிழந்திருப்பதை கிண்டலடிக்கும் விதமாக குறிப்பிட்டார்.
இதனிடையே மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் வலிமையை சுட்டிக்காட்டி, “நாம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். இது போன்றதொரு வெற்றியை யாரும் கண்டதில்லை” என ட்ரம்ப் மார்தட்டினார்.
அவரின் இப்பேச்சு, ஈரானின் ‘கதையை முடிக்காமல்’ விடமாட்டார் என்பதையே நமக்கு உணர்த்துகிறது…



