பிபாவின் தர வரிசையில் ஹரிமாவ் மலாயா அணி 138ஆவது இடத்திற்கு வீழ்ச்சி

கோலாலம்பூர், ஏப் 2 – அனைத்துலக காற்பந்து சம்மேளமான Fifa வெளியிட்ட அண்மைய உலக தர வரிசையில் தேசிய காற்பந்து அணியான Harimau Malaya 121ஆவது இடத்திலிருந்து 138 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.
மொத்தமாக 1,086.22 புள்ளிகளைப் பெற்றுள்ள Harimau Malaya அணி , நேற்று நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றின் ‘F’ பிரிவுக்கான தங்களின் கடைசி ஆட்டத்தில் வியட்நாமிடம் 3 -1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து 17 இடங்கள் பின்தங்கியுள்ளது.
நேப்பாளம் மற்றும் வியட்நாமிற்கு எதிரான ஹரிமாவ் மலாயாவின் முந்தைய தகுதிச் சுற்றுப் போட்டிகளை ஆசிய கால்பந்து சம்மமேளனம் தள்ளுபடி செய்த முடிவும் இந்தத் தரவரிசைச் சரிவுக்கு ஒரு காரணமாகும்.
கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம்தேதி சுல்தான் இப்ராஹிம் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா 2 -0 என்ற கோல் கணக்கில் நேப்பாள அணியையும், கடந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் வியாட்னாம் அணியையும் வீழ்த்தியது.
எனினும் Harimau Malaya அணி தகுதியற்ற வீரர்களை களமிறக்கியதை ஆசிய காற்பந்து சமயலினம் கண்டறிந்ததை தொடர்ந்து அந்த 2 ஆட்டங்களிலும் மலேசியா 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டதாக ஆசிய காற்பந்து சமயலினத்தின் ஒழுங்கு மற்றும் நெறிமுறை குழு அறிவித்தது.



