
குவாந்தான், ஏப்ரல்-4-மலேசிய இளைஞர்கள், இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
குவாந்தானில் நடைபெற்ற மடானி நிகழ்ச்சியில் பேசிய அவர், உண்மைக்கு எதிராகப் பேசும் மற்றும் பிற இனங்களை இழிவுபடுத்தும் குரல்கள் நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் என எச்சரித்தார்.
AI வரை தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும், மனிதர்களுக்கு இடையில் கண்ணியம் மற்றும் ஒற்றுமை இல்லையென்றால் அதற்கு அர்த்தமில்லை என்றார் அவர்.
“‘நாம் உயர்த்த விரும்புவது மனித கண்ணியத்தை தான். அதற்கு நல்லொழுக்கம், கலாச்சாரம், நல்ல உறவுகள் அவசியம்” என அன்வார் வலியுறுத்தினார்.
இளைஞர்களை உருவாக்க holistic அதாவது முழுமையான கல்வி மற்றும் நல்லொழுக்கம் முக்கியம் எனவும் பிரதமர் சொன்னார்.



