
கோலாலம்பூர், ஏப்ரல்-6-Public Bank Bhd வங்கியின் துணை நிறுவனமான Public Mutual, மார்ச் 31-ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில் அதன் 5 நிதிகளுக்கு RM132 மில்லியனுக்கும் அதிகமான இலாபப் பகிர்வை அறிவித்துள்ளது.
அதில் ஆக அதிகமாக, Public Regular Savings Fund நிதியின் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 1.82 சென் இலாப ஈவாக வழங்கப்படுகிறது.
Public Institutional Bond Fund, PRS Conservative Fund மற்றும் PRS Islamic Conservative Fund நிதிகளுக்கு தலா 0.80 சென் இலாப ஈவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், Public e-Asia Pacific REITs Flexi Fund நிதிக்கு 0.22 சென் இலாப ஈவு வழங்கப்படுகிறது.
இந்த அனைத்து இலாபப் பகிர்வும் ஆண்டுதோறும் வழங்கப்படுபவையாகும்.
180-க்கும் மேற்பட்ட நிதிகளை நிர்வகிப்பதன் மூலம், Public Mutual மலேசியாவின் மிகப்பெரிய தனியார் அறங்காப்பு நிதி நிறுவனமாக தொடருகிறது…



