Latestஅமெரிக்காஉலகம்

UFO இரகசியக் கோப்புகள் வெளியீடு: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு

வாஷிங்டன், மே-11-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் அல்லது UFO தொடர்பான இரகசியக் கோப்புகளை வெளியிட உத்தரவிட்டுள்ளது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pentagon எனப்படும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு, Alien Files அதாவது வேற்றுகிரகவாசிகளின் ஆவணம் என்று அழைக்கப்படும் முதற்கட்ட இரகசிய ஆவணங்களை கடந்த மே 8-ஆம் தேதி வெளியிட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, வேற்று கிரகவாசிகள் இருப்பது இவ்வாண்டுக்குள் உறுதிப்படுத்தப்படுமா என்பது குறித்து கிரிப்டோ சந்தையான Polymarket -டில் மில்லியன் கணக்கான டாலர் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது வரை சுமார் 33 மில்லியன் டாலர் மதிப்பிலான பந்தயங்கள் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

“அமெரிக்க மக்கள் உண்மையை அறியத் தகுதியானவர்கள்” எனக் கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், மிகவும் சுவாரசியமான பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், ஏலியன்கள் குறித்த ஆதாரங்கள் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா போன்றவர்கள் மறுத்துள்ளனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான இந்நடவடிக்கை, பல தசாப்த கால மர்மங்களுக்கு விடை தருமா அல்லது வெறும் யூகமாகவே முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!