Latestமலேசியா

புத்ராஜெயா இடைநிலைப்பள்ளி கிடங்கில் தீ விபத்து; யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

கோலாலம்பூர், மே 14 – புத்ராஜெயா பிரேசின்ட் 14(1) இடைநிலைப்பள்ளி (SMK Putrajaya Presint 14(1)) மண்டபக் கிடங்கில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேச கல்வித் துறை (Jabatan Pendidikan Wilayah Persekutuan – JPWP) தெரிவித்துள்ளது.

புத்ராஜெயா காலில்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் (Fadhlina Sidek) சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டதுடன், உடனடி உதவிக்காக ஆரம்ப கட்டமாக 100,000 ரிங்கிட் ஒதுக்கீட்டை அறிவித்தார்.

இந்த நிதி சுத்தம் செய்யும் பணிகள், சேதமடைந்த மின்சாரம் மற்றும் பிற பயன்பாட்டு வசதிகளை மீண்டும் இணைக்கும் பணிகள், சிறிய பழுதுபார்ப்பு வேலைகள் மற்றும் தொடர்புடைய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!