Latestஉலகம்மலேசியா

பிலிப்பைன்ஸ் கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய மலேசியர் மரணம் ; வெளியுறவு அமைச்சு உறுதி

கோலாலம்பூர், மே-26–பிலிப்பைன்ஸின் அஞ்சலஸ் நகரில் நேற்று நிகழ்ந்த கட்டிட இடிபாட்டுச் சம்பவத்தில் சிக்கிய இரண்டு மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மணிலாவில் உள்ள மலேசியத் தூதரகம் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு மலேசியர் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருப்பதாகவும், அவருக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

மேலும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுக்கு விஸ்மா புத்ரா தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!