Latestமலேசியா

ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் ஆடவரின் சடலம் மீட்பு

கோலாலம்பூர், மே-28-ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த ஆடவரின் சடலம் குறித்து மாலை மணி 5.13க்கு தகவல் கிடைத்ததாக செராஸ் மாவட்ட போலீஸ தலைவர் , உதவி கமிஷனர் முகமட் ரோஸ்டி டாவுட்( Mohd Rosdi Daud ) தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில், பாதிக்கப்பட்டவர் சுமார் 20 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நபர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் குழுவினர் நடத்திய உடற்கூறு பரிசோதனையில், பாதிக்கப்பட்டவரின் உடலில் எந்தக் குற்றச் செயல்களுக்கான அடையாளங்களும் கண்டறியப்படவில்லை என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் Mohd Rosli Daud தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!