
கோலாலம்பூர், ஜூன்-3-பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி தலைமையிலான மலேசிய பெர்சமா கட்சி ( Bersama ) ஜோகூரில் நடைபெறும் 16வது மாநிலத் தேர்தலில் அதிகாரப்பூர்வமாகப் போட்டியிட உள்ளது.
ஜோகூர் மாநில தேர்தலில் போட்டியிடப்படும் சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை குறித்த பேச்சுக்கள் இன்று மட்டுமே நடைபெறும் என ரபிசி மற்றும் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமட் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
ஜோகூர் தேர்தலில் குறுகிய காலத்தில் ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கவும், அதன் செயல்திறன் மற்றும் பலவீனங்களைச் சோதிக்கவும், அத்துடன் வரவிருக்கும் தேர்தல்களுக்குத் தயாராகவும் இந்த பேச்சுக்கள் பெர்சமா கட்சிக்கு உதவும் என அவர்கள் தெரிவித்தனர்.
BERSAMA-வின் தலைமை மற்றும் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் பல விவாதங்கள் நடத்தப்பட்ட பின்னரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு செய்யப்பட்ட தகவலையும் அவர்கள் வெளியிட்டனர்.
மே 17 ஆம் தேதியன்று கட்சி மீண்டும் தொடங்கப்பட்டிருந்தபோதிலும், ஜோகூர் மாநிலத் தேர்தல், பெர்சாமாவை ஜோகூர் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.



