Latestமலேசியா

காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கவும்; தன்னிச்சையான தேட வேண்டாம் – தீயணைப்புத் துறை எச்சரிக்கை

மலாக்கா, ஜூன்-22-காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், பொது மக்கள் தாங்களாகவே தேடும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என மலாக்கா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை எச்சரித்துள்ளது.

​ஆயர் குரோவில் காடுகளுக்குள் சென்று காணாமல் போன 34 வயது நபர் ஒருவரை, பொது மக்கள் கடந்த 2 நாட்களாகத் தேடிவிட்டு, நேற்று மதியம்தான் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தாமதமாகத் தகவல் கிடைத்த போதிலும், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்நபர் மலாக்கா தாவரவியல் பூங்கா அருகிலுள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில் பலவீனமான நிலையில் மீட்கப்பட்டார்.

​இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில தீயணைப்புத்துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் Mohd Shahrom Laji, மீட்புப் பணிகளில் ஏற்படும் இத்தகைய தாமதம் தேடுதல் எல்லையை விரிவுபடுத்துவதோடு, அரசாங்கத்தின் வளங்களை வீணடிக்கும் என்றார்.

​மேலும், உரியப் பயிற்சி இல்லாத பொது மக்களின் இத்தகைய தன்னிச்சையான தேடுதல் முயற்சிகள், தேடுபவர்களின் பாதுகாப்புக்கே ஆபத்தாக முடிந்து மற்றொரு நெருக்கடியை உருவாக்கலாம்.

எனவே, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடகங்களில் பகிருவதற்கு முன்பாக உடனடியாக அவசரப் பிரிவைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!