
குவாலா கிராய், ஜூன் 29 – குவாலா கிராய் லாலோ (Laloh) பகுதியிலுள்ள பண்ணையில் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனின் வலது கையில் சுமார் 2 ‘இன்ச்’ அளவிலான ஆணி குத்தி காயமடைந்துள்ளது. மேலும் சுமார் 1 மீட்டர் நீளமுள்ள மரப்பலகையும் கையில் சிக்கியிருந்தது.
உடனடியாக குடும்பத்தினர் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சிகிச்சைக்கு தடையாக இருந்த மரப்பலகையை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சுமார் 15 நிமிடங்களில் பாதுகாப்பாக வெட்டி அகற்றினர்.
அச்சிறுவன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.



