Latestமலேசியா

இஸ்கந்தர் புத்தேரியில் பிறந்த குழந்தையை வீசியதாக 19 வயது ரோஹிங்கியா பெண் கைது

இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-17-ஜோகூர், Iskandar Puteriயில் கருவை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் 19 வயது ரோஹிங்கியா பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டிருந்த அக்கரு Bukit Indahவில் Taman Nusa Idaman பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக Iskandar Puteri மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் எம். குமராசன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அக்கரு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் 34 வயது உள்ளூர் நபரும் ஹோட்டலொன்றில் அப்பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

தனது முன்னாள் காதலனுடனான உறவின் மூலம் உருவான கருவை அப்பெண் வீசியதும் தெரிய வந்ததாக குமரேசன் கூறினார்.

ஹோட்டல் அறையின் கழிவறையில் இருந்து அப்பெண் கருவை ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் வைத்து, ஜன்னல் வழியாக கட்டிடத்திற்குக் கீழே உள்ள பகுதியில் வீசியதாக நம்பப்படுகிறது.

கைதான ஆடவருக்கு ஏற்கனவே குற்றம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதும், பெண்ணுக்கு அவ்வாறு எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.

சிறுநீர் பரிசோதனைகளில் அவர்கள் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்தது. விசாரணைக்காக சம்பந்தப்பட்ட ஆடவர் தடுத்து வைக்கக்கப்பட்டிருந்தார். அப்பெண் நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை ஆவணங்கள் ஜோகூர் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்பெண்ணின் மீது இன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆடவர் சாட்சியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் குமராசன் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மேற்போகாமலும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும் 12 முறைக்குக் குறையாத பிரம்படியும் கொடுக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!