Latestஉலகம்விளையாட்டு

உலகக் கிண்ணம் 2026; இங்கிலாந்துக்கு மூன்றாமிடம்; 22 கோல்களுடன் எம்பாப்பே வரலாற்றுச் சாதனை

மயாமி, ஜூலை-19-2026 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கான விறுவிறுப்பான ஆட்டத்தில், இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது.

‘இறுதியாட்டத்திற்கு முந்தைய இறுதியாட்டம்’ என இரசிகர்களால் வருணிக்கப்பட்ட இவ்வாட்டம் அந்த பெரும் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை.

​கோல் மழை பொழிந்த இவ்வாட்டத்தில், பிரான்ஸ் நட்சத்திரம் கிளியன் எம்பாப்பே உலகக் கிண்ண வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இன்று காலை அவர் அடித்த இரண்டு கோல்களுடன் சேர்த்து, தனது உலகக் கிண்ண வாழ்க்கை வரலாற்றில் மொத்தம் 22 கோல்களை எம்பாப்பே பதிவுச் செய்துள்ளார்.

​இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை எம்பாப்பே பெற்றுள்ளார்.

இதுவரை முதலிடத்தில் இருந்த அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியை விட, எம்பாப்பே ஒரு கோல் முன்னிலையில் உள்ளார்.

இருப்பினும், நாளை அதிகாலை நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக மெஸ்ஸி விளையாடவுள்ளதால், இந்தச் சாதனைப் போர் மேலும் சுவாரஸ்யமாகியுள்ளது.

ஏற்கனவே இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை 10 கோல்கள் அடித்து தங்கக் காலணிக்கான விருதில் எம்பாப்பே முன்னணியில் உள்ளார்; மெஸ்ஸி 8 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!