Latestமலேசியா

சபாவில் மகளை ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை; 105 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தாவாவ், ஜூலை 21-குடும்பம் மற்றும் மகளின் கல்விச் செலவுகளை தானே ஏற்றதாகக் கூறி, அந்தத் தியாகத்தை காரணமாக்கி தனது 25 வயது மகளை மனரீதியாக மிரட்டி, ஹோட்டல் அறை முன்பதிவு செய்ய வற்புறுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த 53 வயது தந்தைக்கு 105 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 70 பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டது.

டிசம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரை சபா தாவாவில் உள்ள பல ஹோட்டல்களில் இந்தக் குற்றங்கள் நடந்துள்ளன.

மகளின் வேலை விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, லஹாட் டத்துவிலிருந்து தாவாவுக்கு வந்து குற்றத்தைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் அக்குற்றவாளி தன் மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, தனது இரண்டு மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்றொரு வழக்கில், இதே நபருக்கு 165 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 110 கசையடிகளும் விதிக்கப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!