Latestஅமெரிக்காஉலகம்

SpaceX ராக்கெட்டின் ஒரு பகுதி நிலவின் மேற்பரப்பில் மோதக்கூடும்: பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

லாஸ் ஏஞ்சல்ஸ், ஆகஸ்ட்.05- பயன்படுத்தப்பட்ட SpaceX ராக்கெட்டின் ஒரு பகுதி சந்திரனின் மேற்பரப்பில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என நாசா கூறியுள்ளதாக Xinhua செய்தி வெளியிட்டுள்ளது.
2025 ஜனவரி 15 ஆம் தேதி நாசாவின் திட்டமொன்றின் கீழ், SpaceX நிறுவனம் Falcon 9 ராக்கெட்டை ஏவி, நிலவுத் தரையிறங்கியொன்றை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது.
அந்தக் ராக்கெட்டின் மேல் பகுதி, சூரியச் செயல்பாடுகள் மற்றும் ஈர்ப்பு விசைகள் காரணமாக நிலவை நோக்கித் திரும்புவதாகக் கூறப்படுகிறது. ராக்கெட்டின் மேல் பகுதி மோதும் போது, சுமார் 60 அடி உள்ளது 12 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கும் என்றும் தூசியையும் பாறைகளையும் சுற்றியுள்ள பகுதிக்குள் வீசும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Falcon 9 ராக்கெட்டின் மேல் பகுதியைக் கண்காணிக்க, தரை அடிப்படையிலான தொலைநோக்கிகள் மற்றும் விண்வெளி சார்ந்த கருவிகளை நாசா பயன்படுத்துகிறது. சுமார் 3,900 கிலோகிராம் எடையுள்ள அந்த ராக்கெட்டின் ஒரு பகுதி, Einstein மற்றும் Bell பள்ளங்களுக்கு அருகில் சந்திரனின் மேற்பரப்பில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசா விஞ்ஞானிகள் அதன் தொடர்பில் சந்திரத் தரவுகளைச் சேகரிக்கவும், விண்வெளியில் உள்ள பொருட்களைக் கண்காணிக்கும் நுட்பங்களைச் செம்மைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு பூமியிலிருந்து வெறும் கண்ணுக்குத் தெரியாது. எனினும் நாசா அதை நேரடியாகக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!