
கோலாலம்பூர், ஆகஸ்ட்-7-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தேசிய இருதய சிகிச்சைக் கழகமான IJN-னில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இன்று நடைபெறவிருந்த நீதிமன்ற நடவடிக்கைகள் மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து அறிவிப்பு தொடர்பான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யின் விசாரணையைத் தொடர்ந்து, பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி இன்று காலை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருந்தார்.
எனினும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குற்றச்சாட்டை வாசிக்கும் நடைமுறையை IJN மருத்துவமனையிலேயே நடத்துவதற்கு அரசு தரப்பு அனுமதி கோரவுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, ஏற்கனவே MACC அதிகாரிகளால் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணமும், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



