
கொச்சி, ஆகஸ்ட்-7,கோலாலம்பூரிலிருந்து கேரளாவின் கொச்சிக்குச் சென்ற விமானத்தில், அவசரக்கால கதவைத் திறக்க முயன்ற 36 வயது பயணி ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.Batik Air OD231 விமானத்தில் பயணித்த அவ்வாடவர், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவசரக்கால கதவின் உட்புறக் கண்ணாடியை உதைத்து சேதப்படுத்தியுள்ளார்.
மேலும் கதவைத் திறக்க முயன்று, அங்கிருந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களை அச்சுறுத்தினார்.உடனடியாகச் செயல்பட்ட விமானப் பணியாளர்களும் சக பயணிகளும் அவரை மடக்கிப் பிடித்துக் கட்டுப்படுத்தினர்.விமானம் கொச்சி விமான நிலையத்தை அடைந்ததும், அவரை கேரளா போலீஸார் கைதுச் செய்தனர்.
நல்லவேளையாக,விமானத்தின் காற்றின் அழுத்தம் காரணமாக கதவு திறக்கப்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.கைதான நபர் மீது பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.



