Latestமலேசியா

உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்கும் வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

AIMST பல்கலைக்கழகம் 100 விழுக்காடு கல்வி உதவித் தொகை சலுகையுடன் கூடிய Foundation Studies-க்கான பொது நேர்காணலை நடத்தவிருக்கிறது. அச்சிறப்பு நேர்முகத் தேர்வு இம்மாதம் 15 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கெடாவில் உள்ள AIMST பல்கலைக்கழக வளாகத்திலும், கோலாலம்பூரில் உள்ள MIED அலுவலகத்திலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.

அச்சிறப்பு நேர்முகத் தேர்வில், மாணவர்கள் வெறும் 25 நிமிடங்களில் தங்களது Scholarship Assessment-ஐ மேற்கொண்டு, Foundation Studies-க்கு 100 விழுக்காடு கல்வி உதவித் தொகை பெறும் வாய்ப்பைப் பெறலாம். அதோடு, Degree Placement-ஐ ஓராண்டுக்கு முன்னதாக உறுதிப்படுத்திக் கொள்ளும் சிறப்பு வாய்ப்பும் வழங்கப்படும்.

SPM மற்றும் IGCSE முடித்த மாணவர்கள், STPM மற்றும் A-Level பட்டதாரிகள், Matriculation மாணவர்கள், UPU விண்ணப்பத்தில் இடம் கிடைக்காத மாணவர்கள் என உயர்கல்வியை தொடர விரும்பும் அனைவரும் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மொத்தம் 80 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்களது நேர்முகத் தேர்வு நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேல் விவரங்கள் பெறவும் முன்பதிவு செய்யவும், திரையில் காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!