Latestமலேசியா

செனட்டர் குறைந்தபட்ச வயதை 25-ஆகக் குறைக்க பரிந்துரை – அமைச்சர் தௌஃபிக்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான (செனட்டர்) தகுதி வயதை 30-லிருந்து 25-ஆகக் குறைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் Dr முஹமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

​நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

​செராஸில் நடைபெற்ற தேசிய இளைஞர் ஆலோசனைக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய முன்மொழிவுகளில் இதுவும் ஒன்றாகும் என்றார் அவர்.

​இதனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிக்கால வரம்பை முறைப்படுத்துவது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பது ஆகிய அம்சங்களும் அதில் ஆலோசிக்கப்பட்டன.

​சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகள் பெறப்பட்டுவிட்டதாகவும், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்த குறிப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

​நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தும் திறன்மிக்க இளம் தலைவர்களை உருவாக்குவதில் அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!