Latestமலேசியா

ஸ்தாப்பாக்கில் பள்ளி மாணவி மரணம்: பகடிவதை குற்றச்சாட்டில் விசாரணை; 92 பேரிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஆகஸ்ட்-23 – ஸ்தாப்பாக்கில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், அவர் பகடிவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து போலீஸார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

​கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 92 சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

​கடந்த ஆகஸ்ட் 18 அதிகாலை 2 மணியளவில், ஜாலான் லங்காவியில் உள்ள தனது வீட்டில் மாணவி அவசர நிலையில் இருப்பதை அவரது தாயார் கண்டறிந்தார்.

உடனடியாக கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மாணவி, அதிகாலை 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

​இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

​பயம் அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கிலான தகாத நடத்தை மற்றும் துன்புறுத்தல் பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மாணவியின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!